Map Graph

சேலையூர், தாம்பரம் வட்டம்

சேலையூர் (Selaiyur) தமிழ்நாட்டின் செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் வட்டத்தில் அமைந்த 20 வருவாய் கிராமங்களில் ஒன்றாகும்., சேலையூர் தாம்பரம்-வேளச்சேரி சாலையில் அமைந்துள்ளது. இது சென்னை மாநகரத்தின் சுற்றுப் பகுதிகளில் ஒன்றாகும். இதன் அருகமைந்த பகுதிகள் சிட்லப்பாக்கம், செம்பாக்கம், மேடவாக்கம் மற்றும் தாம்பரம் ஆகும். அருகமைந்த தொடருந்து நிலையம் தாம்பரம் தொடருந்து நிலையம் ஆகும். சென்னை விமான நிலையம் 9 கி.மீ. தொலைவில் உள்ளது. கிழக்கு தாம்பரம் பேருந்து நிலையம் 3 கி.மீ. தொலைவில் உள்ளது. இவ்வூரில் சேலையூர் அமிர்தகடேசுவரர் கோயில் மற்றும் சேலையூர் ஏரி உள்ளது.

Read article